முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை..!

அரசியல்தமிழகம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை..!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை..!

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடந்துள்ளது. இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்,அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி மீது வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் இந்த சோதனை பட்டியலில் தற்போது தங்கமணியும் இணைந்துள்ளார்.

சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave your comments here...