பிபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : மருத்துவமனை ஊழியர் கைது

இந்தியா

பிபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : மருத்துவமனை ஊழியர் கைது

பிபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு  பதிவு : மருத்துவமனை ஊழியர் கைது

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிலர் சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இதையடுத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வரும் 40 வயதான நபர் ஒருவர் பிபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதனை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...