மனித நேய அடிப்படையில் ஆப்கனுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பிய இந்தியா..!

இந்தியாஉலகம்

மனித நேய அடிப்படையில் ஆப்கனுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பிய இந்தியா..!

மனித நேய அடிப்படையில் ஆப்கனுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பிய இந்தியா..!

தலிபான் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு மனித நேய அடிப்படையில் மத்திய அரசு மருந்து உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி உள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கிஉள்ளது. அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.இதையடுத்து ஆப்கனி லிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. கடும் நிதி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடியில் சிக்கி ஆப்கன் தவிக்கிறது. தலிபான் அரசை அங்கீகரிக்காவிட்டாலும் ஆப்கன் மக்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவிகள் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழியாக 50 ஆயிரம் டன் கோதுமையை லாரிகள் மூலம் அனுப்ப இந்தியா முடிவு செய்துஉள்ளது. இதற்கான நடைமுறைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மனித நேய அடிப்படையில் ஆப்கனுக்கு விமானம் வாயிலாக இந்தியா நேற்று அனுப்பி வைத்தது.இவை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...