நான் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளேன் – மலையாள சினிமா இயக்குனர் அலி அக்பர்

இந்தியாசினிமா துளிகள்

நான் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளேன் – மலையாள சினிமா இயக்குனர் அலி அக்பர்

நான் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளேன் – மலையாள சினிமா இயக்குனர் அலி அக்பர்

மலையாள திரையுலகில் அறியப்பட்ட இயக்குனர் அலிஅக்பர் இவர் ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.

கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் ராணுவ முழு மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யபட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முப்படைகளின் முதன்மை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை கொண்டாடும் வகையில் சிலர் சர்ச்சை கருத்துகளை பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் சார்ந்துள்ள மதத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அலி அக்பர்.

அவர் மட்டுமல்லாது அவரது மனைவி லூசியம்மாவும் தன்னுடன் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். “என் பெயரை ராமசிம்ஹன் என மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது மகள்களை எக்காரணம் கொண்டும் மதம் மாறும்படி நான் சொல்ல மாட்டேன். அது அவர்களது விருப்பம்” என தெரிவித்துள்ளார் அவர். இதனை அவரது புதிய சமூக வலைதள பக்கத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேரள மாநில பாஜக மாநில கமிட்டி குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் அவர். அக்கட்சியின் கேரள மாநில தலைவர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.

Leave your comments here...