தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! யூடியூபர் மாரிதாஸ் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்..!

அரசியல்

தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! யூடியூபர் மாரிதாஸ் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்..!

தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது!  யூடியூபர் மாரிதாஸ் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்..!

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாசை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரிதாசை கைது செய்யக்கூடாது என போலீசாரை தடுத்தனர். ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் முழக்கமிட்டனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு மாரிதாசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஒரு சில பதிவுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள், கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.

மணிகண்டன் மரணம் தொடர்பாக ஏன் மீடியாக்களில் விவாதம் நடத்தப்படவில்லை, மு.க.ஸ்டாலின் எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பிய மாரிதாஸ், தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதேபோல் டுவிட்டரிலும் தனது கருத்தை காட்டமாக பதிவிட்டிருந்தார்.

இதேபோல் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவைத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், மாரிதாஸ் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர். யூடியூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், மதன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மதுரையில் மாரிதாஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது!”என்று கூறியுள்ளார்.

Leave your comments here...