பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி பெற லஞ்சம் ; ஊராட்சி செயலாளர் கைது.!

தமிழகம்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி பெற லஞ்சம் ; ஊராட்சி செயலாளர் கைது.!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி பெற லஞ்சம் ; ஊராட்சி செயலாளர் கைது.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியம்மாள் மூதாட்டி . இவர் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்து தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூதாட்டிக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் நிதி வந்திருப்பதாகவும் அதனைப் பெற 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ஊராட்சி செயலர் அய்யனார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் – முதலில், பத்தாயிரம் ரூபாய் முன்பணமாக கொடுப்பதாக மூதாட்டி கூறியதுபோல், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து அனுப்பி அதை, ஊராட்சி செயலர் பெறும்போது, அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

மேலும், கைது செய்து அவரது வீடு அலுவலகம் முன்னிட்டு சோதனை நடந்தது.மேலும் அவரை கைது செய்து அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை என்பது நடைபெற்று வருகிறது.

Leave your comments here...