சென்னை விமான நிலையத்தில் ரூ. 57.30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்..!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 57.30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 57.30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்..!

சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு, டிசம்பர் 7-ந் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, கொழும்பில் இருந்து வந்த இலங்கை விமானம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த பாலிதீன் பையை சோதனையிட்டதில், 592 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இதன் மதிப்பு ரூ.25.69 லட்சம்.

மற்றொரு நிகழ்வில் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணியிடம் விசாரணை நடத்தி அவரது உடமைகளை சோதனையிட்ட போது, கைக்கணினிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.22.13 லட்சம் மதிப்புள்ள 510 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கணக்கில் வராத ரூ.9.47 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அந்த பயணி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...