ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்..!

தமிழகம்

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்..!

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் (வயது 45) வீட்டில், திருவண்ணாமலை மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.

தொடர்ச்சியாக 15 மணிநேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட அந்தச் சோதனையின் முடிவில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.10,73,520 வரைவோலையாகவும், 23,32,770 ரூபாய் ரொக்கமாகவும், 193.75 சவரன் தங்கநகைகள், 2.17 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி மதிப்பிலான நில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இதில் தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டும் கணக்கீடு செய்யப்பட்டு மீண்டும் செல்வ குமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.மேலும், காட்பாடி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் அவர் பெயரிலும், அவர் மனைவி சிவசங்கரி பெயரிலும் வாங்கி குவித்த வீடு, நிலம் உள்ள சொத்து பத்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் மீது Vellore Vigilance and Anti-Corruption Cr.No. 20/2021 u/s 13(2) r/w 13(1)(e) of the PC Act 1988 and 109 IPC r/w 13(2) r/w 13(1)(e) of the PC Act 1988 உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் 9 வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடக்கம் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி உதவி பொறியாளராக கடந்த 2013 இருந்து 2017 ஆண்டுக்கான வங்கி கணக்குகளை கணக்கிடு செய்வதற்காக 9 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்,2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் எனவும் பின்னர் 2008 ஆம் ஆண்டு செல்வகுமார் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் 2013 இருந்து 2017 ஆண்டுகளுக்கு இடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ளது

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில்,’ செல்வகுமார், மனைவி சிவசங்கரி ஆகியோர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. லஞ்ச விவகாரத்தில் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது,’ என்றனர்.

Leave your comments here...