அணைகள் பாதுகாப்பு மசோதா : சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், திமுக,மதிமுக அரசியல் செய்கிறது – பாஜக தலைவர் அண்ணாமலை

அரசியல்

அணைகள் பாதுகாப்பு மசோதா : சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், திமுக,மதிமுக அரசியல் செய்கிறது – பாஜக தலைவர் அண்ணாமலை

அணைகள் பாதுகாப்பு மசோதா : சட்டம் குறித்த புரிதல் இல்லாமல்,  திமுக,மதிமுக  அரசியல் செய்கிறது – பாஜக தலைவர் அண்ணாமலை

நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், அரசியல் செய்வதற்காக திமுக,மதிமுக போன்ற கட்சிகள், இச்சட்டத்தை எதிர்க்கின்றனர் என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அரசியல் செய்வதற்காக தி.மு.க. – ம.தி.மு.க. போன்ற கட்சிகள் எதிர்க்கின்றன.


காங். தலைமையில் இருந்த மத்திய அரசின் அலட்சியத்தால் 34 ஆண்டுகளாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம். அணை பாதுகாப்பு மசோதா வாயிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு போன்றவற்றை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும்.

அணை பாதுகாப்பு மசோதாவானது நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. அணை பராமரிப்பில் மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களின் நன்மைகளை பற்றியும் மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரின் மற்றொரு அறிக்கையில் ‘ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்துாரில் மணிகண்டன் என்ற கல்லுாரி மாணவரை போலீசார் அடித்து கொலை செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் முழுமையான விசாரணை நடக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Leave your comments here...