சாதனை படைத்த மாற்றுத்திறனாளி : ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்..!

இந்தியா

சாதனை படைத்த மாற்றுத்திறனாளி : ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்..!

சாதனை படைத்த மாற்றுத்திறனாளி : ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்..!

தெலுங்கானாவில் 3 அடி உயரமுள்ள ஒருவருக்கு, ‘டிரைவிங் லைசென்ஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவின், கரீம்நகரைச் சேர்ந்த கட்டிபள்ளி ஷிவபால் 42, தற்போது ஐதராபாதில் வசித்து வருகிறார். 3 அடி உயரமுள்ள அவர் 2000ல் ஐதராபாதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வேலை பார்த்தே 2004ல் பட்டம் பெற்றார்.கார் ஓட்ட வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் உயரம் அதற்கு தடையாக இருந்தது.

இந்நிலையில், இன்டர்நெட்டில் பார்த்தபோது உயரம் குறைவான ஒருவர் தனக்கு ஏற்றபடி காரை மாற்றியமைத்தது குறித்து தெரிந்து கொண்டார். அதையடுத்து காரை வாங்கி தன் உயரத்துக்கு ஏற்ப அதில் மாற்றங்கள் செய்தார். நண்பர்கள் உதவியுடன் கார் ஓட்டப் பழகினார்.

ஆனால் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியவில்லை. சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட உய ரம் இருந்தால் மட்டுமே லைசென்ஸ் பெற முடியும். போக்குவரத்து உயரதிகாரிகளை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.நம் நாட்டிலேயே மிகவும் உயரம் குறைவான நபருக்கு லைசென்ஸ் வழங்கப்படுவது இதுவே முதல்முறை. தன்னைப் போல் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கார் ஓட்டப் பயிற்சி அளிக்கப்போவதாக ஷிவபால் கூறியுள்ளார்.

Leave your comments here...