வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா – காவல் உதவி ஆய்வாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு.!

சமூக நலன்தமிழகம்

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா – காவல் உதவி ஆய்வாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு.!

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா – காவல் உதவி ஆய்வாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு.!

மதுரையில் தன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்திய காவல்துறை அதிகாரியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மதுரை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக டாபர் மேன் வகையைச் சேர்ந்த சுஜி என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், செல்லமாக வளர்த்து வரும் தனது நாய் கர்ப்பம் தரித்த நிலையில், அவரது குடும்பதினர் வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து தனது வீட்டில் பெண் நாய் சுஜிக்கு வளைகாப்பு நடத்தினார். தனது குடும்பத்தினரோடு, அருகில் வசிப்பவர்களையும் அழைத்து தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

வளைகாப்பின் போது பெண் நாய் சுஜிக்கு வண்ண வண்ண வளையல்கள் அணிவித்தும், மாலை அணிவித்தும் ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். மேலும் ஐந்து வகை உணவுகளை தயார் செய்து அதனை சுஜிக்கு அளித்ததோடு, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கு விருந்து வைக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தனது வளர்ப்பு நாய் சுஜிக்கு நடத்திய வளைகாப்பு வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு, நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...