கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம் : செவிலியர் சஸ்பெண்ட்.!

இந்தியா

கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம் : செவிலியர் சஸ்பெண்ட்.!

கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம் : செவிலியர் சஸ்பெண்ட்.!

கேரளாவில் 10ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் நேற்று முன்தினம் 15 வயதில் போட வேண்டிய தடுப்பூசியை போடுவதற்காக ஆரியநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இடம் தெரியாமல் தவறுதலாக மருத்துவமனையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு 2 மாணவிகளும் சென்றனர். அங்கிருந்த செவிலியர் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். சிறிதுநேரம் கழித்து தான் தடுப்பூசி மாறி செலுத்திய விவரம் மாணவிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து 2 மாணவிகளையும் ஆஸ்பத்திரியில் அமர்த்தி டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்தனர். உடல் நலகுறைவு எதுவும் ஏற்படாததால் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்றதும் சிறிதுநேரத்தில் இருவருக்கும் காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உறவினர்கள் இருவரையும் அருகில் உள்ள உழமலைக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ெதாடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்ேறார் ஆரியநாடு போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே திருவனந்தபுரம் மாவட்ட மருத்துவ அதிகாரி ஜோஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், செவிலியர் ராஜி கவனக்குறைவால் மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டது தெரியவந்தது. இதையடுத்து நர்ஸ் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...