பாஜக ஆதரவுடன் பஞ்சாபில் ஆட்சி அமைப்பேன் -அமரீந்தர் சிங்

அரசியல்

பாஜக ஆதரவுடன் பஞ்சாபில் ஆட்சி அமைப்பேன் -அமரீந்தர் சிங்

பாஜக ஆதரவுடன் பஞ்சாபில் ஆட்சி அமைப்பேன் -அமரீந்தர் சிங்

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் காங்கிரஸ் மூத்த தலைவரும் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் பதவி விலகினார் மேலும் கட்சியை விட்டும் விலகினார்.

அதன் பிறகு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என அமரீந்தர் அடுத்தடுத்து பாஜ தலைவர்களை சந்தித்ததும், அவர் பாஜ.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், `தான் பாஜ.வில் சேரப்போவதில்லை. புதிய கட்சி தொடங்க இருக்கிறேன்’ என்று அமரீந்தர் அதிரடியாக அறிவித்தார். அதே நேரம், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றினால் பாஜ.வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை அமரீந்தர் சிங் நேற்று சந்தித்தார்.

பின்னர், அமரீந்தர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.நேற்று அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. முதல்-மந்திரியுடன் காபி சாப்பிட்டேன். கடவுள் அருளால், பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம். எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பார்ப்போம். விவசாயிகள் போராட்டத்தில் எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது. அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...