வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகளின் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தமிழகம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகளின் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகளின் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தமிழக வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள நவம்பா் 1ந்தேதி முதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ந்தேதி 18 வயது நிறைவடைவோா் தங்களது பெயா்களை சேர்க்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள மூன்று சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வாக்காளா் பட்டியல் பெயா் சேர்ப்புக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரையில், வாக்காளா் பட்டியலில் பெயா்களை சேர்க்க 9 லட்சத்து 44 ஆயிரத்து 26 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலில் நீக்கங்கள் மேற்கொள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்து 34 மனுக்களும், திருத்தங்கள் செய்ய கோரி ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 919 மனுக்களும், ஒரே பேரவை தொகுதிக்குள் ஒரு வட்டத்தில் இருந்து மற்றொரு வட்டத்துக்கு பெயரை மாற்றம் செய்ய ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 609 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியலில் பெயா்களை சேர்க்க கோரி 10 வெளிநாடு வாழ் இந்தியா்களும் மனுக்களை அளித்துள்ளனா். மொத்தமாக, 14 லட்சத்து 27 ஆயிரத்து 598 மனுக்கள் தோதல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய ஆய்வுக்கு பிறகு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தோதல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...