சென்னை விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள  தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.1.12 கோடி மதிப்புள்ள 2.59 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து விசாரணை நடத்தினர். அப்போது காபி தயாரிக்கும் பாத்திரத்தில் உருளை வடிவிலான தங்கக்கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்தப் பயணியும், அவரை வரவேற்க வந்திருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...