இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியா

இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது. இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை, இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை,” என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அந்த கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் இடையே உரையாற்றிய அவர்:- இந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது, இந்தியா இல்லாமல் இந்துக்களும் இல்லை. இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது. இந்தியா சுயமாக நிற்கிறது, இதுதான் இந்துத்துவாவின் சாரம்சம். இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தியா இந்துக்களின் தேசமாக இருக்கிறது.

சுதந்திரத்தின்போது நடந்த தேசப்பிரிவினைக்குப் பின், இந்தியா உடைந்து, பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. இந்தியா தேசப்பிரிவினையின் போது பாதிக்கப்பட்டதை மறந்து விடக்கூடாது. இந்தப் பிரிவினை நடக்காமல் இருந்தால் இந்த வலிபோயிருக்கும்.

நாம் இந்துக்கள் என்ற சிந்தனையை மறந்ததால் தான் இந்த தேசப்பிரிவினை நடந்தது. முஸ்லி்ம்கள் கூட இதை மறந்து விட்டார்கள். இந்துக்கள் என்று தங்களை நினைக்க கூடியவர்களின் வலிமை முதலில் குறைந்துவிட்டது. பிறகு எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் தான், பாகிஸ்தான் இந்தியாவாக இல்லை.

இந்துக்களின் எண்ணிக்கையும், வலிமையும், பலமும் குறைந்து வருகிறது. இந்து என்ற உணர்வு குறைந்து வருகிறது. இந்துக்கள் தங்களை இந்துவாக இருக்க வேண்டும் என்றால், பாரதம் அகண்டபாரதமாக இருக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்

Leave your comments here...