தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்

உள்ளூர் செய்திகள்தமிழகம்

தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்

தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் ஆணையராக இளங்கோவன் பொறுப்பேற்று கொண்டார். நகராட்சியாக இருந்து வந்த சென்னை தாம்பரம், மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி இதற்கான அரசாணை கடந்த 4-ஆம் தேதி வெளியானது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதைத் தொடர்ந்து தாம்பரம் நகராட்சி ஆணையராக இருந்த இரா.லெட்சுமணன் கூடுதல் பொறுப்பாக ஆணையர் பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த இளங்கோவன் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக 24-ம் தேதி பணிமாற்றம் செய்யப்பட்டார்.

தாம்பரம் மாநகராட்சியின் முதல்ஆணையராக இளங்கோவன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave your comments here...