பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகராட்சிக்கு விருது..!

சமூக நலன்

பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகராட்சிக்கு விருது..!

பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகராட்சிக்கு விருது..!

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 19 சென்னை தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 சென்னைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேற்குறிப்பிட்ட 281 சென்னைப் பள்ளிகளில் மழலையர் குழந்தைகளுக்காக 200 மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 83,000 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் உருது வழியில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. சென்னைப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவியர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தரமான கல்வியை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மின்னணு வகுப்பறைகளை கொண்ட 28 பள்ளிகள் கட்டமைக்கப்பட்ட,மின்னணு வகுப்பறைகளுக்கு தேவையான மின்னணு உபகரணங்களுடன் வகுப்பறைகளாக (Smart Class) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை இந்த திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தத் திட்டம் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் சமூகத்திற்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சராசரியாக வகுப்பு வருகை, பங்கேற்பு மற்றும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை சீர்மிகு நகர நிறுவனத்திற்கு 15.11.2019 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற குளோபல் ஸ்மார்ட் சிட்டிஸ் ஃபோரம் 2019 என்ற நிகழ்ச்சியில்,  சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 28 சென்னைப் பள்ளிகளில் வாவகுப்பறைகள் அமைத்து சிறப்பான ஸ்மார்ட் கல்வி முறையை செயல்படுத்தியமைக்காக வழங்கப்பட்ட விருதினை, நாகாலாந்து அரசின் உயர்/தொழில்நுட்பக் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.டெம்ஜென் இம்னா அவாங் அவர்கள் வழங்க, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் கோவிந்தராவ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.அக முருகன், உதவி கல்வி அலுவலர் திருமதி டி-தனகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Leave your comments here...