தமிழகத்தில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

இந்தியாதமிழகம்

தமிழகத்தில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழகத்தில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 8 சாலைகளையும் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு , விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்கும், அந்த சாலைகளில் உடனடியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்றும் அறிக்கைகளை அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


தேசிய நெடுஞ்சாலைகளாக மாறும் 8 சாலைகள் விவரம்:

1. திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலை (65 கி.மீ)
2. வள்ளியூர் – திருச்செந்தூர் சாலை (70 கி.மீ)
3. கொல்லேகால் – மாதேஸ்வரன் மலை – பாலாறு சாலை (30 கி.மீ)
4. பழனி – தாராபுரம் சாலை (31 கி.மீ)
5. ஆற்காடு – திண்டிவனம் சாலை (91 கி.மீ)
6. மேட்டுப்பாளையம் – பவானி சாலை (98 கி.மீ)
7. அவினாசி – மேட்டுப்பாளையம் (38 கி.மீ)
8. பவானி – கரூர் சாலை (77 கி.மீ)

அக்கடிதத்தில் திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி, வள்ளியூர் – திருச்செந்தூர், பழனி – தாராபுரம் ,ஆற்காடு – திண்டிவனம், மேட்டுப்பாளையம் – பவானி, அவிநாசி -மேட்டுப்பாளையம், பவானி – கரூர் உள்ளிட்ட சாலைகளை 500கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave your comments here...