வேளாண் அறிவியல் நிலையத்தில் கம்பு மற்றும் கேழ்வரகு சாகுபடி பற்றிய மூன்று நாள் பயிற்சி.!

தமிழகம்

வேளாண் அறிவியல் நிலையத்தில் கம்பு மற்றும் கேழ்வரகு சாகுபடி பற்றிய மூன்று நாள் பயிற்சி.!

வேளாண் அறிவியல் நிலையத்தில்  கம்பு மற்றும் கேழ்வரகு சாகுபடி பற்றிய மூன்று நாள் பயிற்சி.!

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் விருதுநகர் வேளாண் அறிவியல் நிலையம் மண்டல ஆராய்ச்சி நிலையம் அருப்புக்கோட்டை இணைந்து ஒருங்கிணைந்த கம்பு மற்றும் கேழ்வரகு சாகுபடி என்னும் தலைப்பில் பண்ணை பள்ளி பயிற்றுநர்களுக்கான 3 நாள் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில், விழுப்புரம் கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சதீஷ் குமார் மற்றும் செயல் அலுவலர் ராஜ மகேந்திரவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியை, அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில், கம்பு மற்றும் கேழ்வரகு சாகுபடியில் பருவத்திற்கேற்ற ரகங்கள், விதைநேர்த்தி தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் கம்பு மற்றும் கேழ்வரகின் பங்கு போன்ற தலைப்புகளின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் ,கம்பு மற்றும் கேழ்வரகில் மதிப்பு பொருட்கள் தயாரிப்பு பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் சி ராஜா பாபு ஒருங்கிணைத்து நன்றியுரையாற்றினார்.

Leave your comments here...