நோய்வாய்ப்பட்ட பசுக்களை காக்க முதல் முறையாக உ.பி.யில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்..!

இந்தியா

நோய்வாய்ப்பட்ட பசுக்களை காக்க முதல் முறையாக உ.பி.யில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்..!

நோய்வாய்ப்பட்ட பசுக்களை காக்க முதல் முறையாக உ.பி.யில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்..!

நோய்வாய்ப்பட்ட பசு மாடுகளை காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட பசு மாடுகளின் உயிரை காக்கும் நோக்கில் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் இரண்டு உதவியாளர்களுடன் அழைப்பு கோரிய 15 முதல் 20 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்தடையும். இதற்காக லக்னோவில் கால் சென்டர் அமைக்கப்படும்.

இத்திட்டத்திற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது. இத்திட்டம் அமலுக்கு வரும்போது நாட்டிலேயே இது முதல்முறையாக இருக்கும்” என்றார்.

Leave your comments here...