பத்மஸ்ரீ விருதுபெற்ற மட்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு உற்சாக வரவேற்பு..!

இந்தியாசமூக நலன்

பத்மஸ்ரீ விருதுபெற்ற மட்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு உற்சாக வரவேற்பு..!

பத்மஸ்ரீ விருதுபெற்ற மட்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு உற்சாக வரவேற்பு..!

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் 1967-ல் பிறந்த முனுசாமி, அவரது தந்தையார் காலத்திலிருந்து அதாவது 1977ஆம் ஆண்டு முதல் சுமார் 44 ஆண்டுகளாக மட்பாண்ட தொழில் செய்து வருகிறார்.

இவர், உருவாக்கிய மட்பாண்ட பொருள்களுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான மட்பாண்ட பொருள்கள், தசரா கொலு பொம்மைகள், மற்றும் சிலைகள் செய்வது இவரின் வழக்கமாகும்.

இவர் களிமண்ணில் உருவாக்கிய 1.2 சென்டிமீட்டர் மட்பாண்ட பொருளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் 1.2 சென்டிமீட்டர் முதல் 50 அடி உயரம் வரை சிற்பம் செய்ததற்கு சர்வதேச விருதான ஜியோகிராபிக் இண்டிகேஷன் என்ற விருதை 2001ஆம் ஆண்டு முதன்முதலாக பெற்றார்.

வெளிநாட்டு கைவினை கலைஞர்களுக்கு மட்பாண்ட பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ள இவரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது.

இதையடுத்து டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ விருதை முனுசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விருது பெற்று புதுச்சேரி திரும்பிய முனுசாமிக்கு வில்லியனூர் ஏழை மாரியம்மன் ஆலயத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்றுகூடி மாலை அணிவித்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave your comments here...