15-லட்சம் மதிப்பிலான 111 திருடு போன செல்போன்கள் – உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை சைபர் கிரைம் போலீசார்.!

சமூக நலன்தமிழகம்

15-லட்சம் மதிப்பிலான 111 திருடு போன செல்போன்கள் – உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை சைபர் கிரைம் போலீசார்.!

15-லட்சம் மதிப்பிலான 111 திருடு போன செல்போன்கள் – உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை சைபர் கிரைம் போலீசார்.!

மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் கடந்த மாதத்தில் பதிவான மொபைல் திருட்டு வழக்குகளில் 15லட்சத்து 80ஆயிரத்து598ரூபாய் மதிப்புடைய 111 செல்போன்கள் கண்பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைகப்பட்டுள்ளது

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் காணமல் போன வழக்குகளின் புகார்களில் அக்டோபர் மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலைய மூலம் ரூ- 15, 80,598/- மதிப்புள்ள 111 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களால் இன்று 11.11.2021 ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் இந்த ஆண்டு இதுவரை ரூபாய் 64,13,853 /- மதிப்புள்ள 511 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த சைபர் குற்ற வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று மாதங்களில் ரூ- 5,51,500/- மற்றும் இதுவரை ரூபாய் ரூ-23,97,636/- உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்கவும் ரகசிய எண், வங்கி கணக்கு எண், OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். என்றும் யாரேனும் ஏமாற நேர்ந்தால் 155260 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம், என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Leave your comments here...