ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி அண்டை நாடுகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் – அஜித் தோவல்

இந்தியா

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி அண்டை நாடுகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் – அஜித் தோவல்

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி அண்டை நாடுகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் – அஜித் தோவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து, தலீபான்கள் அங்கு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர்.

தலீபான் ஆட்சியாளர்களுக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஒருசில நாடுகளே ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தலீபான்களுக்கு ஆதரவு வழங்க வில்லை. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலீபான்களால் ஆசிய கண்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:- இந்த ஆலோசனை கூட்டம் நடத்துவது இந்தியாவுக்கு கிடைத்த பாக்கியம். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் வளர்ச்சி அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்

இந்த ஆலோசனை, பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான நேரம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கும், மேம்படுத்துவதற்கும் அல்லது கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எங்கள் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்

Leave your comments here...