இந்தியா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டிருந்த 4-வது ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் “வேலா” : இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..!

இந்தியா

நான்காவது ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் “வேலா” இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. ப்ராஜக்ட்-75 திட்டத்தின் 4-வது நீர்மூழ்கிக் கப்பலான யார்டு 11878 இந்திய கடற்படையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

ஸ்கார்ப்பியன் வகையைச் சேர்ந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது ப்ராஜக்ட்-75 திட்டத்தில் அடங்கும். இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரான்ஸ் நாட்டின், திருவாளர்கள் நேவல் குரூப் ஒத்துழைப்புடன், மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தாயரிக்கப்பட்டு வருகின்றன.

“வேலா” என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல், 6, மே 2019 அன்று தனது சேவையைத் தொடங்கி, கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இடையேயும், அனைத்து பெரிய துறைமுகங்கள் மற்றும் ஆயுதம், சென்சார் ஒத்திகை உள்ளிட்ட அனைத்துக் கடல்வழி ஒத்திகைகளையும் நிறைவு செய்துள்ளது. இந்த வகையைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் மிகவும் சிக்கலானது என்பதோடு, அனைத்து சாதனங்களையும் சிறிய அளவுடையதாக மாற்றி கடுமையான தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருப்பதால், இது மிகவும் சிரமமான பணியாகும்.

இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டிருப்பது ‘தற்சார்பு இந்தியாவை’ நோக்கிய மற்றொரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்படையில் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்படுவது, இந்தியக் கடற்படையின் திறனை மேம்படுத்தும்.

Leave your comments here...