குண்டும் குழியுமான சாலை – சீரமைத்த போக்குவரத்து போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

தமிழகம்

குண்டும் குழியுமான சாலை – சீரமைத்த போக்குவரத்து போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

குண்டும் குழியுமான சாலை – சீரமைத்த போக்குவரத்து போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் கோவையில் பெய்த கனமழையால் ஆத்துப்பாலம் சாலை சிதிலமடைந்து சேறும் சகதியுமானது. இந்த சாலை முக்கிய பிரதான சாலை என்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

இதனை அறிந்த கோவை மாநகர போக்குவரத்து போலிஸார் விரைந்து வந்து குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியாக இருந்த சாலையை மண்வெட்டி கொண்டு சமன்படுத்தினர்.போக்குவரத்து போலிஸாரின் இந்த நடவடிக்கைப் பார்த்து அப்பகுதி மக்கள் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் விரைந்து சாலையைச் சமன்படுத்திய போலிஸாருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Leave your comments here...