குளிர்காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலில் நேற்று நடை அடைக்கப்பட்டது..!

ஆன்மிகம்இந்தியா

குளிர்காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலில் நேற்று நடை அடைக்கப்பட்டது..!

குளிர்காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலில் நேற்று நடை அடைக்கப்பட்டது..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், யமுனோத்ரி கோவில்களில் குளிர்காலத்தையொட்டி நேற்று நடை அடைக்கப்பட்டது. நடை சாத்தும் நிகழ்வையொட்டி இந்த கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

வேத மந்திர முழக்கங்களுக்கு இடையே கேதார்நாத் கோவிலில் காலை 8 மணிக்கும், யமுனோத்ரி கோவிலில் நண்பகல் 12.15 மணிக்கும் நடைகள் சாத்தப்பட்டன.

அதன்பின் சிவபெருமான் பாபா கேதாரின் சிலை உக்கிமாத்துக்கும், யமுனா தேவியின் சிலை கர்சாலிக்கும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் எடுத்துச்செல்லப்பட்டன. குளிர்காலம் முழுவதும் திருவுருவச் சிலைகள் அங்கேயே இருக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கான புனித யாத்திரையில் 4.50 லட்சம் பக்தர்கள் இந்த கோவில்களுக்கு சென்றனர். கங்கோத்ரி கோவில் நடை நேற்று முன்தினம் மூடப்பட்டது. புனித யாத்திரை நிறைவாக வருகிற 20-ந் தேதி பத்ரிநாத் கோவில் நடை அடைக்கப்படும்.

Leave your comments here...