இந்து கடவுள் அவமதிப்பு: திருமாவளவன் மீது 200 காவல் நிலையங்களில் புகார்- இந்து முன்னணி..!

சமூக நலன்

இந்து கடவுள் அவமதிப்பு: திருமாவளவன் மீது 200 காவல் நிலையங்களில் புகார்- இந்து முன்னணி..!

இந்து கடவுள் அவமதிப்பு: திருமாவளவன் மீது 200 காவல் நிலையங்களில் புகார்- இந்து முன்னணி..!

சென்னை கிண்டி காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை இந்து முன்னனி சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வே.நித்தியானந்தம் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “சமீபத்தில் புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டத்தில் அதன் தலைவர் திருமாவளவன் திட்டமிட்ட வகையில் இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தியுள்ளார். இந்து மத உணர்வுகளையும், அதன் நம்பிக்கைகளையும், அவமதித்துள்ளார். அத்துடன் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார்.

அவர் பேசும் காணொளி இந்துக்கள் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது. இத்தகைய செயலில் ஒரு மக்களவை உறுப்பினர் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது 295, 295(A), 153(A), உள்ளிட்ட பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் இந்து முன்னணியின் புதுச்சேரி மாநில செயலாளர் ரமேஷ், ஒதியஞ்சாலை போலீசில் திருமாவளவன் மீது புகார் அளித்து உள்ளார் மேலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் இந்து முன்னணி செயலாளர் சிலம்பரசன், கரிக்கலாம்பாக்கம் போலீசில் அளித்துள்ளனர்.

இதுபோல் தமிழகம் முழுவதும் 200 காவல் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என இந்து முன்னணி டுவிட்டர் வலைதளத்தில்  கூறியுள்ளது.

Leave your comments here...