தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.431 கோடிக்கு மது விற்பனை!

தமிழகம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.431 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.431 கோடிக்கு மது விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் 431 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது.

தீபாவளிக்கு முந்தைய நாளான 3ஆம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 47.21 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.27 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.36.75 கோடிக்கும் மது விற்பனையானது.

தீபாவளியன்று சென்னை மண்டலத்தில் ரூ.41.84 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.51.68 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.46.62 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.47.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.37.71 கோடிக்கும் மது விற்பனையானது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் கடந்த ஆண்டு ரூ.227.88 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.205.61 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளியன்று ரூ.239.81 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.225.42 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.467.69 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.431.03 கோடிக்கு மதுவிற்பனையாகியிருக்கிறது.

Leave your comments here...