பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி உயர்வு..!

இந்தியா

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி உயர்வு..!

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி உயர்வு..!

பாலகோட் விமான தாக்குதல் ஹீரோ அபிநந்தன் கமாண்டர் பதவியிலிருந்து குழு கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தகர்த்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவின. பதிலுக்கு இந்திய போர் விமானங்கள் விரைந்து சென்று, பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்தன. இதில் இந்திய விமானப்படை கமாண்டரான தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

அப்போது நடந்த சண்டையில் அபிநந்தன் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன், சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் மூலம், பாலகோட் தாக்குதலின் ஹீரோவாக புகழ் பெற்ற அபிநந்தனுக்கு வீர தீர செயலுக்கான வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுவரை விமானப்படையில் விங் கமாண்டராக பதவி வகித்து வந்த அபிநந்தனுக்கு தற்போது குழு கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Leave your comments here...