தமிழ்நாட்டின் 20 வது மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் – அரசிதழ் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

தமிழகம்

தமிழ்நாட்டின் 20 வது மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் – அரசிதழ் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் 20 வது மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் – அரசிதழ் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. தமிழக சட்டசபையில் தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றது. சமீபத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கான காவல் ஆணையம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனாகபுத்தூர் உள்ளிட்ட ஐந்து நகராட்சிகள் சிட்லபாக்கம், பெருங்களத்தூர், திருநீர்மலை, பீர்க்கன்கரணை ஆகிய பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக் கட்டமாக நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. தற்பொழுது தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ள நிலைகளில் வார்டு வரையறை முடிந்த பின் நகராட்சி தேர்தல் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave your comments here...