ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து..!

இந்தியாதமிழகம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து..!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமை விலகி நன்மையும், இருள் விலகி ஒளி பிறக்கும் பண்டிகை தீபாவளி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பண்டிகையை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம்’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:- ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள் தீபத்திருவிழா மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்:- தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச்செய்கிறது. இதுவே தீபாவளிச் செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என கூறி உள்ளார்.

Leave your comments here...