பொறியியல் மாணவர்களுக்கு நேரடிமுறையில் தேர்வுகள் நடைபெறும் – அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகம்

பொறியியல் மாணவர்களுக்கு நேரடிமுறையில் தேர்வுகள் நடைபெறும் – அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கு நேரடிமுறையில் தேர்வுகள் நடைபெறும் – அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றன.

அதேபோல, கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகளும் ஆன்-லைன் வழியில் பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

தற்போது கொரோனோ தோற்று குறைந்துள்ளதையடுத்து பி.இ, மற்றும் பிடெக் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை நேரடியாக வரவழைத்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆன்லைன் வழி தேர்வு முறை கைவிடப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பொறியியல் படிப்பிற்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது

Leave your comments here...