அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்வு..!

இந்தியா

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்வு..!

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்வு..!

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,30,127 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.23,861 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,421 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,360 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.32,998 கோடி உட்பட) மற்றும் மேல் வரி (செஸ்) ரூ.8,484 கோடி (இறக்குமதி வசூலிக்கப்பட்ட ரூ.699 கோடி உட்பட) ஆகும்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.27,310 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.22,394 கோடியும், மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு பின், மத்திய மற்றும் மாநில அர
சுகளின் மொத்த வருவாய், அக்டோபர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.51,171 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.52,815 கோடி.

கடந்த அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வருவாயைவிட 24 சதவீதம் அதிகம். 2019-20 நிதியாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாயைவிட 36 சதவீதம் அதிகம்.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் வசூலான இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும். இது பொருளாதார மீட்பைக் காட்டுகிறது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு அக்டோபரைவிட தற்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

Leave your comments here...