வங்கதேசத்தில் ஹிந்துகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் செயற்குழுவில் கண்டனம்..!

இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் செயற்குழுவில் கண்டனம்..!

வங்கதேசத்தில் ஹிந்துகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் செயற்குழுவில் கண்டனம்..!

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் அகில இந்திய செயற்குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியில் நேற்று துவங்கியது.

பாரத மாதா சிலைக்கு மலர் துாவி, ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், தேசிய பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபெலே ஆகியோர் செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்தனர்.

மண்டல முக்கியஸ்தர்கள், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நாடு முழுதிலிருமிருந்து, 350 பேர் பங்கேற்றனர். அமைப்பின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள், தொண்டர்களுக்கான திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வங்கதேசத்தில் ஹிந்துகள் மீதான தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாளை வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. பல முக்கிய விஷயங்கள் குறித்து இன்றும், நாளையும் விவாதிக்கப்படுகிறது.

Leave your comments here...