ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு..!

இந்தியாவிளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு..!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு..!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.

அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. 

டெண்டர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருந்தன. அணியின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், லக்னோ புதிய அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.  லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்ட சிவிசி நிறுவனம் அகமதாபாத் அணியை  ஏலத்தில் எடுத்துள்ளது. ஆர்பிஎஸ்ஜி  குழுமம் லக்னோ அணியை ஏலத்தில் எடுத்துள்ளது. 

Leave your comments here...