சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜை நிறைவு – கோவில் நடை அடைப்பு

ஆன்மிகம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜை நிறைவு – கோவில் நடை அடைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜை நிறைவு – கோவில் நடை அடைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் நேற்று வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. கேரளாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

ஆனால் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நேற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 3-ந் தேதி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

அதன்பின்பு, மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 16-ந் தேதி முதல் மண்டல பூஜை, வழிபாடுகள் தொடங்கும். டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் டிசம்பர் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 31-ந் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு சிறப்பு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். அன்று காலை பந்தளம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

2021-ம் ஆண்டு நடப்பு மண்டல சீசனை முன்னிட்டு சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Leave your comments here...