கோயில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து, இந்து முன்னணி விழிப்புணர்வு பிரசாரம்.!

தமிழகம்

கோயில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து, இந்து முன்னணி விழிப்புணர்வு பிரசாரம்.!

கோயில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து, இந்து முன்னணி விழிப்புணர்வு பிரசாரம்.!

தமிழக அரசு கோயில்களில் உள்ள பழைய நகைகளை, தில்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆலையில் உருக்கி, கோயில் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

இதைக் கண்டித்து, இந்து முன்னணியினர், தமிழகத்தில் கோயில் பகுதிகளில், விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கியும், இந்த திட்டத்தை, தமிழக அரசு கைவிடக் கோரியும் பிரசாரங்களை செய்து வருகிறது.

இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடக் கோரி, மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்து முன்னணியினர், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், மாவட்டத் தலைவர் அழகர்சாமி, மாணிக்க மூர்த்தி சதீஷ் ஆகிய நிர்வாகிகள், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Leave your comments here...