ஆப்கானிஸ்தானில் வாலிபால் விளையாட்டு வீராங்கனை தலை துண்டித்து கொலை..!

உலகம்

ஆப்கானிஸ்தானில் வாலிபால் விளையாட்டு வீராங்கனை தலை துண்டித்து கொலை..!

ஆப்கானிஸ்தானில் வாலிபால் விளையாட்டு வீராங்கனை தலை துண்டித்து கொலை..!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கன் தேசிய பெண்கள் வாலிபால் குழுவைச் சேர்ந்த மஜபின் ஹகிமி என்ற பெண் வீராங்கனை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, வாலிபால் குழு பயிற்சியாளர் சுரயா அப்சலி, ‘பெர்ஷியன் இண்டிபெண்டன்ட்’ என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: இம்மாத துவக்கத்தில் தேசிய பெண்கள் வாலிபால் குழுவைச் சேர்ந்த மஜபின் ஹகிமி, தலிபான்களால் தலை துண்டிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, கதறக் கதற கொலை செய்யப்பட்டார்.

இதை வெளியே சொல்லக் கூடாது என, அவரது பெற்றோர் மிரட்டப்பட்டனர். சில நாட்கள் கழித்து, மஜபின் ஹகிமியின் தலை துண்டிக்கப்பட்ட படத்தை தலிபான் வெளியிட்டுள்ளது. தலிபான் ஆப்கனை கைப்பற்றுவதற்கு முன், பல விளையாட்டு வீராங்கனைகள் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றனர்.

ஆனால் இருவர் தான் வெளியேற முடிந்தது. பல நாடுகள், ஆப்கனில் இருந்து பெண் விளையாட்டு வீராங்கனைகளை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. கத்தார் அரசு மட்டும், கால்பந்து வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அடங்கிய 100 பேரை கடந்த வாரம் மீட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...