போதைப் பொருள் வழக்கு : நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யகானுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு..!

இந்தியா

போதைப் பொருள் வழக்கு : நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யகானுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு..!

போதைப் பொருள் வழக்கு : நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யகானுக்கு  மீண்டும் ஜாமின் மறுப்பு..!

மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3-ம் தேதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

மேலும், அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன்கான், அர்பாஸ் மெர்சண்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது.

Leave your comments here...