நேதாஜிக்கு ​ வரலாற்றில் உரிய இடம் கொடுக்கவில்லை : அமித்ஷா

இந்தியா

நேதாஜிக்கு ​ வரலாற்றில் உரிய இடம் கொடுக்கவில்லை : அமித்ஷா

நேதாஜிக்கு ​ வரலாற்றில் உரிய இடம் கொடுக்கவில்லை : அமித்ஷா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு அநீதி நடந்ததாக உணர்கிறோம், அவருக்கு தகுதியான இடம் வரலாற்றில் கொடுக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

அந்தமானில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் இது தொடர்பாக பேசிய அமித் ஷா, “ அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் “சுதந்திர யாத்திரை ஸ்தலம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்களும் இந்த யூனியன் பிரதேசத்திற்கு ஒரு முறையாவது வருகை தரவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இதற்கு முன்னர் மூன்று தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு, ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என்று பெயர் மாற்றியதற்கு இதுவே காரணம்.

இந்த ஆண்டு நாம் ஆசாதி கா அம்ரித் மோஹோத்சவ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நேதாஜியின் வாழ்க்கையை பார்க்கும் போது, அவருக்கு அநீதி நடந்ததாக உணர்கிறோம். அவருக்கு தகுதியான இடம் வரலாற்றில் கொடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக, பல தலைவர்களின் புகழை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இப்போது அவர்களுக்கு வரலாற்றில் சரியான இடத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் இது. தங்கள் உயிரை தியாகம் செய்த மக்கள் வரலாற்றில் இடம் பெற வேண்டும். அதனால்தான் இந்த தீவுக்கு நேதாஜியின் பெயரை மாற்றினோம்” என தெரிவித்தார்

Leave your comments here...