போதை பொருள் வழக்கு : சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்..!

இந்தியாசினிமா துளிகள்

போதை பொருள் வழக்கு : சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்..!

போதை பொருள் வழக்கு : சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்..!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.

அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யான் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆர்யான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ஆர்யான் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், தீர்ப்பை 20ம் தேதிக்கு நீதிபதி வி.வி.பாட்டீல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவர் குடும்பத்தினர் மணி ஆர்டர் அனுப்பியுள்ளனர். சிறையில் உள்ள கேன்டினில் செலவழிப்பதற்காக ரூ.4500 ரூபாய் அனுப்பியுள்ளனர். சிறை கைதிகளுக்கு அதிகப்பட்சமாக ரூ.4,500 மட்டுமே மணியார்டர் அனுப்ப முடியும் என்பதால், அவர்கள் அந்த தொகையை அனுப்பியுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவர் அம்மாவும் நடிகர் ஷாருக்கானின் மனைவியுமான கவுரி கான், வீட்டில் இருந்து காலை டிபனும் அவருக்குத் தேவையான பொருட்களையும் சிறைக்கு சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றார். ஆனால், ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...