100 கோடியை எட்டி சாதனை படைக்கும் கொரோனா தடுப்பூசி – சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டம்..!

இந்தியா

100 கோடியை எட்டி சாதனை படைக்கும் கொரோனா தடுப்பூசி – சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டம்..!

100 கோடியை எட்டி சாதனை படைக்கும்  கொரோனா தடுப்பூசி –  சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டம்..!

கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி ‘டோஸ்’ அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது; இதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி, இந்தியா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்த சாதனை குறித்து விமானங்கள், ரயில்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அறிவிப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும் நாளில் நாடு முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

Leave your comments here...