மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி விமான சேவை – இண்டிகோ நிறுவனம்.

தமிழகம்

மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி விமான சேவை – இண்டிகோ நிறுவனம்.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி விமான சேவை – இண்டிகோ நிறுவனம்.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத் என ஒரு நாளைக்கு 20 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வேண்டுமென திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமும் மதியம் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4:20 மணிக்கு திருப்பதி சென்றடையும் எனவும், மாலை, 4.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...