ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..!

சமூக நலன்

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..!

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..!

ஆசியாவின் மிகப்பெரிய ஒரு சந்தை வளாகமாகும் கோயம்பேடு மார்க்கெட். 1996 இல் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள் 2,000 சில்லறை கடைகள் உட்பட சுமார் 3,100 கடைகள் உள்ளன. இவற்றுள் 850 பழக் கடைகள் உள்ளது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழைப்பழ மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்கு செயற்கை முறையில் எத்திலின் ரசாயனம் ஸ்பிரே தெளித்து பழங்கள் பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இங்கு விற்பனை செய்யப்படும் வாழைத்தார்கள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை  அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில், சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர். ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்,  30க்கும் மேற்பட்ட வாழைப்பழ கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 3 கடைகளில் ரசாயன முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 10 டன் வாழைப்பழ தார்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பழங்களை பழுக்க வைக்கும் சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால்  வாயு ஆகியவையும் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனை  செயற்கை முறையில் வாழைப்பழங்களை பழுக்க வைத்த கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கடைகளை ‘சீல்’ வைக்கவும் மார்க்கெட் நிர்வாக குழுவுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:- கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர் ஆய்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த புகார்களை 9444042322 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அனுப்பலாம்”என்றும் இந்த சோதனை தொடரும் என்றார்..!

Leave your comments here...