கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு அதிரடி பரிசுகள்..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு அதிரடி பரிசுகள்..!

கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு   அதிரடி பரிசுகள்..!

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை (10.10.2021) நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு வாசிங் மெஷின், ஆன்ட்ராய்டு போன், பிரஷர் குக்கர், சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி திருவிழா 5 ஆம் கட்டமாக நாளை (10.10.2021) நடைபெறுகிறது. அதன்படி ,மதுரை மாநகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சுமார் 500 இடங்களில் 75000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி திருவிழாவில், தடுப்பூசி செலுத்துபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதிரடி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அவற்றில் ,முதல் பரிசாக ஒரு நபருக்கு வாசிங் மெஷின், இரண்டாவது பரிசாக 2 நபர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைலும், மூன்றாவது பரிசாக 10 நபர்களுக்கு பிரஷர் குக்கர்களும், சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

எனவே ,மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி : ரவிசந்திரன்

Leave your comments here...