சொகுசு கப்பலில் போதை விருந்து – ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் ..!

இந்தியாசினிமா துளிகள்

சொகுசு கப்பலில் போதை விருந்து – ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் ..!

சொகுசு கப்பலில் போதை விருந்து – ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு  14 நாள் நீதிமன்ற காவல் ..!

மஹாராஷ்ட்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ஒருசொகுசு கப்பல் ஒன்றில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பயணிகள் போல படகில் ஏறி அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் கைதான ஆர்யன் கான்,23 மும்பை கில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்.07 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு இன்று (அக்.07) விசாரணைக்கு வந்தது.

ஆர்யன்கான் கோர்ட்டில் ஆஜரானார். அவர் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே, போதை தடுப்பு பிரிவு போலீசார் தரப்பில் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் ஆகியோர் ஆஜராகினர்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மறுத்தார். அவரை மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது. அதேநேரத்தில் ஆர்யன் கானிடம் வரும் 11 ம் தேதி வரையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற என்.சி.பி.,யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Leave your comments here...