ஆந்திராவில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்..!

இந்தியாசமூக நலன்

ஆந்திராவில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்..!

ஆந்திராவில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்..!

ஆந்திராவில் ஆயிரத்து 710 கிலோ எடை கொண்ட போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரின்சிந்தப்பல்லி மண்டலம் பகுதியில், லொத்துகெட்டா என்ற கிராமத்தில், போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதிக்‍கு போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது, ஆயிரத்து 710 கிலோ எடை கொண்ட போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...