கத்தோலிக்க தேவாலயங்களில் 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை – எந்த நாட்டில் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்

உலகம்

கத்தோலிக்க தேவாலயங்களில் 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை – எந்த நாட்டில் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்

கத்தோலிக்க தேவாலயங்களில்  70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை – எந்த நாட்டில் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏறக்குறைய 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளதாக சுயாதீன விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1950 முதல் இந்த கொடூரம் அங்கு அரங்கேறி வந்ததாக 2500 பக்கம் கொண்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. ஜீன்-மார்க் சாவ் (Jean-Marc Sauve) தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த படுபாதக குற்றச் செயலை செய்தது சுமார் 3000 பேர். அதில் மூன்றில் இரண்டு பங்கு மத குருமார்கள் என சொல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு பங்கு தேவாலயங்களின் பிற ஊழியர்களால் அரங்கேற்றப்பட்டவை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவிகிதம் பேர் சிறுவர்கள் (ஆண்) என தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாகவும் அல்லது பாலியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டு காலம் இந்த பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த விசாரணை நடந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நீதிமன்றம், தேவாலயம், போலீஸ், பத்திரிகை செய்திகள் மாதிரியான தரவுகளை சேர்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஹாட் லைன் எண் மூலமாகவும் பாதிக்கப்பட்ட 6500 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது பிரான்ஸ் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

Leave your comments here...