புதிய சட்டத்திருத்தம் : ஜனாதிபதி , பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம் – 6 மாதம் சிறை…!!

சமூக நலன்

புதிய சட்டத்திருத்தம் : ஜனாதிபதி , பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம் – 6 மாதம் சிறை…!!

புதிய சட்டத்திருத்தம் : ஜனாதிபதி , பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம் – 6 மாதம் சிறை…!!

இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போதுள்ள சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தின்படி (1950) இக்குற்றத்தை முதல் தடவை செய்தால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. அதே தவறை மறுபடியும் செய்தாலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படுவதில்லை.சின்னங்கள் மற்றும் பெயர்களை தனியார் வர்த்தக மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற முறையில் பயன்படுத்துதலை தடுக்கும் சட்டத்தில் நுகர்வோர் விவகார அமைச்சகம் திருத்தம் கொண்டு வருகிறது.

பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஜியோவும் , ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம்மும் தங்களது சேவையை சந்தைப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்தனர். இந்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் சர்ச்சையாக வெடித்தது. இதனைதொடர்ந்து பிரதமரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியது குறித்து இரண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. மோடியின் புகைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்தியது தொடர்பாக ஜியோ, பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு கேட்டுள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் மாநிலங்களைவையில் தெரிவித்து இருந்தார்

இதேபோல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் ராம்ராஜ் நிறுவனம் மோடி வேட்டி சட்டை அணிந்து சீன அதிபரின் கைகளை பற்றியிருக்கும் புகைப்படத்துடன் ‘உறவுகள் மேம்பட’ என்ற தலைப்புடன் தனது நிறுவனத்திற்கு விளம்பரம் தேடியுள்ளதுஆனால் அனுமதி இல்லாமல் எந்த தனி நபரின் புகைப்படத்தை பயன்படுத்துவதும் குற்றமே. அதோடு பிரதமரின் புகைப்படத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதற்காக அந்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டு இருந்தன.

இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை தவறாக அனுமதியின்றி பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதம் புதிய சட்டத்தின் கீழ் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், பாராளுமன்றம் தர்மா சக்கரம், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள் வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.இந்த சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வருகிறது.

Leave your comments here...